Author

Ootrapada vendume unnathathin aavi Lyrics PPT ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி

உயிர்ப்பிக்க வேண்டும், எம்மை தேவா

முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை

பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2)

 

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க

ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்

நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ

அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட

 

  1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்

போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்

 

  1. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்

ஜெபத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்

 

  1. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்

தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்

 

  1. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்

சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் - எண்ணெய்

 

  1. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா

ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே - எண்ணெய்

Posted by Lyrics Manager on December 10 at 06:29 AM