உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்ம நேசர் நீரல்லோ
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தெய்வம் நீரல்லோ
ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் ஜொலிக்குதே
வியாதிகள் வந்தாலும்
சோர்வுகள் நேரிட்டாலும்
சுகம் தரும் தேவன் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின்
தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே