Author

Jeyam kodukkum devanukku Lyrics PPT ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

கோடி கோடி ஸ்தோத்திரம்

வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு

வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்

 

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்

ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

 

  1. நீதியின் கரத்தினால்

தாங்கியே நடத்துவார்

கர்த்தரே என் பெலன்

எதற்குமே அஞ்சிடேன் - ஜெயம்

 

  1. அற்புதம் செய்பவர்

அகிலம் படைத்தவர்

யுத்தத்தில் வல்லவர்

மீட்பர் ஜெயிக்கிறார் - ஜெயம்

 

  1. நம்பிக்கை தேவனே

நன்மை தருபவர்

வார்த்தையை அனுப்பியே

மகிமைப் படுத்துவார் - ஜெயம்

 

  1. உண்மை தேவன்

உருக்கம் நிறைந்தவர்

என்னை காப்பவர்

உறங்குவதில்லையே - ஜெயம்

Posted by Lyrics Manager on November 29 at 07:44 AM