Author

Lesana kaariyam umakadhu Lyrics PPT லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்

பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

 

  1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (2)

மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2)

உமக்கது, லேசான காரியம் - பெலன்

 

  1. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)

தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)

உமக்கது, லேசான காரியம் - பெலன்

 

  1. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)

இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)

உமக்கது, லேசான காரியம் - பெலன் உள்ளவன்

Posted by Lyrics Manager on November 25 at 06:15 AM