Author

Maangal neerodai vaanchithu Lyrics PPT மான்கள் நீரோடையை வாஞ்சித்து அலைவதுபோல்

மான்கள் நீரோடை வாஞ்சித்து

கதறும் போல் தேவனே

எந்தன் ஆத்துமா உம்மையே

வாஞ்சித்து கதறுதே

 

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்

கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

 

  1. தேவன் மேல் ஆத்துமாவே

தாகமாயிருக்கிறதே

தேவனின் சந்நிதியில் நின்றிட

ஆத்துமா வாஞ்சிக்குதே - மான்கள்

 

  1. ஆத்துமா கலங்குவதேன்

நேசரை நினைத்திடுவாய்

அன்பரின் இரட்சிப்பினால் தினமும்

துதித்து போற்றிடுவோம் - மான்கள்

 

  1. யோர்தான் தேசத்திலும்

எர்மோன் மலைகளிலும்

சிறுமலைகளிலிருந்தும் உம்மை

தினமும் நினைக்கின்றேன் - மான்கள்

 

  1. தேவரீர் பகற் காலத்தில்

கிருபையைத் தருகின்றீர்

இரவில் பாடும் பாட்டு எந்தன்

வாயிலிருக்கிறதே - மான்கள்

 

  1. கன் மலையாம் தேவன்

நீர் என்னை ஏன் மறந்தீர்

எதிரிகளால் ஏங்கி அடியேன்

துக்கத்தால் திரிவதேனோ? - மான்கள்

Posted by Lyrics Manager on November 25 at 05:59 AM