Author

Album

Nandri niraintha ithayathodu Lyrics PPT நன்றி நிறைந்த இதயத்தோடு

நன்றி நிறைந்த இதயத்தோடு

நாதன் இயேசுவை பாடிடுவேன்

நன்றி பலிகள் செலுத்தியே நான்

வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

 

என் இயேசு நல்லவர்

என் இயேசு வல்லவர்

என் இயேசு பெரியவர்

என் இயேசு பரிசுத்தர் - நன்றி

 

நான் நடந்து வந்த பாதைகள்

கரடு முரடானவை

என்னை தோளில் தூக்கி சுமந்தார்

அவர் அன்பை மறப்பேனோ - என்

 

என் கரத்தை பிடித்த நாள் முதல்

என்னை கைவிடவே இல்லை

அவரின் நேசம் எனது இன்பம்

அவர் நாமம் உயர்த்துவேன் - என்

 

என் போக்கிலும் எந்தன் வரத்திலும்

என் இயேசுவே பாதுகாப்பு

என் கால்கள் சறுக்கிடும் நேரம்

அவர் கிருபை தாங்குமே - என்

Posted by Lyrics Manager on October 22 at 08:03 AM