Author

Album

Nandri solli paaduven Lyrics PPT நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின் நாமத்தையே

நன்றி சொல்லி பாடுவேன்

நாதன் இயேசுவின் நாமத்தையே

நன்றியால் என் உள்ளம் நிறைந்தே

நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

 

நல்லவரே வல்லவரே

நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

 

கடந்த நாட்கள் முழுவதும் என்னை

கண்ணின் மணி போல் காத்தாரே

கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்

கனிவாய் என்னை நடத்தினாரே

 

எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு

எதிராய் வந்து எழும்பினாலும்

சேனையின் கர்த்தர் என் முன்னே

செல்கிறார் என்று பயப்படேனே

 

துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே

சூழ்ந்து என்னை நெருக்கினாலும்

கன்மலை தேவன் என்னோடு இருக்க

கவலையில்லை என் வாழ்விலே

 

மேகங்கள் மீது மன்னவன் இயேசு

வேகம் வருவார் ஆனந்தமே

கண்ணீர் துடைத்து பலனைக் கொடுக்க

கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Posted by Lyrics Manager on October 22 at 08:00 AM