Author

Karam pidithennai vazhi nadathum Lyrics PPT கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கண்மணி போல காத்துக் கொள்ளும்

கறை திரை இல்லா வாழ்வளித்து

பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்

 

  1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே

மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்

புல்வெளி மேய்ச்சல் காண செய்து

அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்

உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்

 

  1. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்

கழுகினை போல என் பயங்கள் மாற்றும்

வானிலும் பூவிலும் நிலை நிற்கும்

வரங்களினாலே எனை நிரப்பும்

உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்

 

  1. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்

ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்

தோழ்களில் என்னை சுமந்து செல்லும்

தோழரைப் போல அன்பு செய்யும்

உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்

Posted by Lyrics Manager on September 26 at 07:37 AM