எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே போதுமே -2
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே -2
- பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே -2
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே – 2 (இயேசு)
- புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் -2
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் -2 (இயேசு)
- மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும் -2
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - 2 (இயேசு)