Author

Album

Intha kallin mel Lyrics PPT இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்

இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்

பாதாளத்தின் வாசல்

அதை மேற்கொள்ளாதே

 

சபையின் தலைவர்

இயேசுவே

மூலைக்கு தலைக்கல்

இயேசுவே

 

அல்லேலூயா அல்லேலூயா

சபைதான் ஜெயிக்குமே

அல்லேலூயா அல்லேலூயா

பாதாளம் தோற்க்குமே

 

இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே

சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே

 

சபைதனில் நிலை நாட்டினீர்

புது மனிதனாய் என்னை மாற்றினீர்

வாழ்க்கையை செழிப்பாக்கினீர்

கிருபையால் உயர்த்தினீர்

என்னை கிருபையால் உயர்த்தினீர்

 

ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே

குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே

ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே

குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே

 

ஆவியில் நல்ல தகப்பனே

சபை முழுவதும் எங்கள் சொந்தமே

வேற்றுமைகள் இங்கு இல்லையே

கிறிஸ்துவின் சரீரமே

நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

 

பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர்

யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர்

எழுப்புதல் தரும் அக்கினி

எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுமே

தடைகளை அது தகர்க்குமே

சபைதான் வெல்லுமே

என்றும் சபைதான் வெல்லுமே

 

அல்லேலூயா அல்லேலூயா

ஆமேன் அல்லேலூயா

Posted by Lyrics Manager on September 05 at 09:39 AM