Author

Album

Aaradhanai naayagan neerae Lyrics PPT ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை வேந்தனும் நீரே

ஆயுள் முடியும் வரை

உம்மை தொழுதிடுவேன்

 

  1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்

ஆண்டவர் இயேசுவிலே

விடிவெள்ளியே  எந்தன் பிரியம் நீரே

என்றென்றும் தொழுதிடுவேன் - ஆராதனை

 

  1. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்

மகிமையின் தேவன் நீரே

முழங்கால் யாவுமே முடங்கிடுமே

மகிழ்வுடன் துதித்திடவே - ஆராதனை

 

  1. முடிவில்லா ராஜ்ஜியம் அருள

திரும்பவும் வருவேன் என்றீர்

ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே

அனுதினம் வணங்கிடுவேன் - ஆராதனை

Posted by Lyrics Manager on September 05 at 09:31 AM