Author

Album

Malaigalellam vazhigalaakkuvaar

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்

கலங்காதே திகையாதே

நிச்சயமாகவே முடிவு உண்டு

 

ஆபிரகாமின் தேவன் அவர்

ஈசாக்கின் தேவன்

யாக்கோபின் தேவன் அவர்

நம்முடைய தேவன்

 

பெரிய பர்வதமே எம்மாத்திரம்

செருபாபேல் முன்னே சமமாகுவாய்

முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே

இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

 

பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்

உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்

வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே

இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

 

தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்

ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே

வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்

இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

Posted by Lyrics Manager on July 16 at 06:32 AM