Author

Album

Panithuli pol pozhigirathe

பனித்துளி போல் பொழிகிறதே

தேவனின் அபிஷேகம் பின்மாரியின்

மழை பொழியும் காலம் வந்ததே

 

ஒருமனதோடு சபையாரெல்லாம்

ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்

கர்த்தர் பெரிய காரியம் செய்யும்

வேளை வந்ததே வேளை வந்ததே

 

தலை குனிந்து வாழ்ந்தது போதும்

தலையை உயர்த்திடு

சிங்கத்தை போல கெர்ச்சித்து

எதிரியை துரத்திடு

எங்கும் தேவனை தொழுது

கொள்ளும் காலம் வந்ததே

எழுப்புதலடைந்து இயேசுவின்

நாமத்தை எங்கும் உயர்த்துவோம்

 

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

 

கோலியாத்தின் சத்தம் கேட்டு

பயந்து போகாதே

உனக்குள் இருக்கும் தேவனை

நீ மறந்து போகாதே

விசுவாசமென்னும் கேடகத்தாலே

ஜெயத்தை பெற்றிடு

சத்துருவை உன் காலின் கீழே

மிதித்து எறிந்திடு

 

உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்

தெரிந்து கொண்டாரே

இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

நமக்கு தந்தாரே

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடந்து செல்லுவோம்

சத்துரு மேலே கொடியை ஏற்றி

தேசத்தை சுதந்தரிப்போம்

Posted by Lyrics Manager on July 15 at 08:03 AM