Author

Album

Enthan kanmalai aanavare Lyrics PPT எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே

என்னை காக்கும் தெய்வம் நீரே

வல்லமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமைக்கு பாத்திரரே

 

ஆராதனை உமக்கே - 4

 

உந்தன் சிறகுகளின் நிழலில்

என்றென்றும் மகிழச்செய்தீர்

தூயவரே என் துணையாளரே

துதிக்கு பாத்திரரே

 

எந்தன் பெலவீன நேரங்களில்

உம் கிருபை தந்தீரையா

இயேசு ராஜா என் பெலனானீர்

எதற்கும் பயமில்லையே

 

எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்

உம்மை புகழ்ந்து பாடிடுவேன்

ராஜா நீர் செய்த நன்மைகளை

எண்ணியே துதித்திடுவேன்

Posted by Lyrics Manager on September 24 at 08:14 AM