Author

Avar endhan sangeethamaanavar Lyrics PPT அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்

பெலமுள்ள கோட்டையுமாம்

ஜீவனின் அதிபதியான அவரை

ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

 

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூத கணங்கள் போற்றும் தேவன் அவரே

வேண்டிடும் பக்தர்களின் குறைகள் தீர்க்கும்

திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே

 

இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்

இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்

இருப்பேன் என்றவர் நமது தேவன்

இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

 

  வானவர் கிறிஸ்தேசு நாமமதை

வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்

வருகையில் அவரோடு இணைந்து என்றும்

வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Posted by Lyrics Manager on December 10 at 05:29 AM