கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்
- மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்
- தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே
- உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்
- இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே
- பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்